என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தலிபான் பயங்கரவாதிகள்
நீங்கள் தேடியது "தலிபான் பயங்கரவாதிகள்"
பாகிஸ்தானில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். #Pakistan #MilitantsAttack
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பலுசிஸ்தான் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Pakistan #MilitantsAttack
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் இன்று வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த 17 கிளர்ச்சியாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistaninsurgents #insurgentskilled
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.
மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.
சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.
மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.
அவர்களுக்கும் சிறப்புப்படை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் பாராளுமன்ற வேட்பாளர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். #TalibanAttack
கந்தகார்:
ஆப்கானிஸ்தானில் வருகிற 20-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தில் வேட்பாளர் குர்மான் என்பவர் தேர்தல் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் அமர்ந்திருந்த சோபாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அதில் அவர் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர். தாக்குதல் நடைபெற்ற ஹெல்மண்ட் பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. தேர்தல் நடைபெறும் இக்கால கட்டத்தில் இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். #TalibanAttack

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று மாலை வரை தலிபான் பயங்கரவாதிகளுடனான சண்டையில் 21 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #Taliban
காபூல்:
ஆப்கானிஸ்தானில் போட்டி அரசை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற பல்வேறு இடங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், அமெரிக்கா உள்ளிட்ட அரசுக்கு ஆதரவான கூட்டுப்படைகளும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை நிலைகுலையச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் குன்டூஷ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று நள்ளிரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்ப்பாராத பாதுகாப்பு படையினர், சற்றே சுதாரித்துக் கொண்டு எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஜவ்ஜான் மாகாணத்தில் உள்ள காம்யாப் மாவட்டத்தில் போலீசாருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை உயர் அதிகாரி பக்கீர் முகமது ஜவ்ஜானி தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலால் 21 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். #Afghanistan #Taliban

×

X